Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/மகளை கர்ப்பமாக்கி கொன்ற காமகொடூரன் கைது : போலீசை திசைதிருப்ப நாடகமாடியது அம்பலம்

மகளை கர்ப்பமாக்கி கொன்ற காமகொடூரன் கைது : போலீசை திசைதிருப்ப நாடகமாடியது அம்பலம்

மகளை கர்ப்பமாக்கி கொன்ற காமகொடூரன் கைது : போலீசை திசைதிருப்ப நாடகமாடியது அம்பலம்

மகளை கர்ப்பமாக்கி கொன்ற காமகொடூரன் கைது : போலீசை திசைதிருப்ப நாடகமாடியது அம்பலம்

ADDED : ஜூன் 01, 2010 01:24 AM


Google News

அருமனை: அருமனை அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி கொடூரமாக கொலை செய்த காமக்கொடூரன் தந்தை கைது செய்யப்பட்டார்.

அருமனை அருகே அம்பலக்கடையை சேர்ந்தவர் றூஸ்வெல்ட்(43). முன்னாள் ராணுவ வீரரான இவர் செல்போன் டவரில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வந்துள்ளார். இவருடைய முதல் மனைவி மரியஏஞ்சல் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துள்ளார். இவர்களுக்கு ஷெர்லிஜாஸ்மின் (16) என்ற மகள் உண்டு. ஷெர்லிஜாஸ்மின் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 தேர்ச்சி பெற்றுள்ளார். றூஸ்வெல்ட், ஐடாசெல்வகுமாரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்கள் மூவருமாக சேர்ந்து அம்பலக்கடையில் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாணவி ஷெர்லிஜாஸ்மின் தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் கிடந்த நகைகள் மற்றும் பீரோ, சூட்கேஸ் போன்றவற்றையும் உடைத்து நகை, பணம் திருடி சென்றதாகவும் யாரோ மாணவியை கொலை செய்ததாகவும் றூஸ்வெல்ட் தரப்பில் கூறப்பட்டது. நேற்று முன்தினம் பிரேத பரிசோதனைக்கு பின் மாணவியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. கொலையாளியை பிடிக்க மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் 3 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஷெர்லிஜாஸ்மின் கொலை செய்யப்பட்ட போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளது பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனால் மாணவியை யாரோ கர்ப்பமாக்கி, இதனை மறைப்பதற்காக கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

பக்கத்து வீட்டிலுள்ள பலரையும் விசாரிக்க முடிவு செய்த தனிப்படையினருக்கு றூஸ்வெல்ட்டின் பழக்கவழக்கங்கள் மற்றும் மோசமான அபிப்பிராயங்கள் தெரியவந்தது. இதனால் போலீசார் றூஸ்வெல்ட் மற்றும் ஐடா செல்வகுமாரி மீது சந்தேகம் கொண்டனர்.

இதனையடுத்து நேற்று அதிகாலை தனிப்படை போலீசார் விசாரணைக்காக றூஸ்வெல்ட் மற்றும் ஐடா செல்வகுமாரியை அழைத்து சென்றனர். விசாரணையில் நம்பமுடியாத மனித குலத்தையே அதிர்ச்சியில் உறைய செய்யும் பல்வேறு தகவல்கள் போலீசாரால் தெரிவிக்கப்பட்டன.



வீட்டில் தனியாக இருந்த ஷெர்லிஜாஸ்மினை தந்தை றூஸ்வெல்ட் தனது காமவெறிக்கு இரையாக்கியுள்ளான். நல்லது கெட்டது அறியாத இளம்பிஞ்சு காமவெறிக்கு பலியானது. இதை பலதடவை தொடர்ந்துள்ளான். இதனால் இளம் வயது மாணவியே குழந்தையை வயிற்றில் சுமக்கவேண்டிய கேடுகெட்ட நிலைக்கு தள்ளப்பட்டது.

கருவை அபார்ஷன் செய்ய றூஸ்வெல்ட் பலவழிகளில் முயன்றுள்ளான். ஆனால் கரு கலையவில்லை. இதுவரை பள்ளிக்கூட விடுமுறையானதால் வெளியே தெரியவில்லை என விட்டுவிட்டதாகவும், பள்ளிக்கூடம் திறந்தால் மாணவி வெளியே சொல்லிவிடுவாள் என நினைத்து பெற்ற மகளையே கொலை செய்ய தீர்மானித்துள்ளான்.

சம்பவத்தன்று தனது இரண்டாவது மனைவியுடன் திருவரம்பு சென்றுள்ளான். பின்னர் மார்த்தாண்டம் சென்றுவிட்டு அம்பலக்கடைக்கு வந்துள்ளான். அங்கு தனியாக இருந்த மகளுக்கு தண்ணீரில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்துவிட்டு மயங்கியவுடன் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்துள்ளான்.

பின்னர் நகைகளையும் கழற்றி பீரோ மற்றும் சூட்கேசை உடைத்து அதிலிருந்த நகை மற்றும் பணத்தை அலமாரியின் மேலுள்ள பூட்ஸ் கவரில் மறைத்து வைத்துவிட்டு வீட்டை சுற்றி மிளகாய் பொடியும் தூவிவிட்டு சென்றுவிட்டான். பின் தனது மனைவியையும் அழைத்துகொண்டு ஒன்றும் தெரியாதது போல் அம்பலக்கடையில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளான். வீட்டிற்கு வந்ததும் மகள் பிணமாக கிடப்பதாகவும், யாரோ கொன்றுவிட்டு நகைகளை திருடி சென்றதாகவும் நாடகமாடியுள்ளான். இவ்வாறு தனிப்படை போலீசார் தெரிவித்தனர். இந்த கொடூர சம்பவம் காரணமாக அம்பலக்கடை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் சோகத்துடன் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர். பெற்ற தந்தைதையே நாம் கட்டிக் காக்கும் பண்பாடான கலாச்சாரத்தை மறந்து தனது ரத்தம் என்றும் பாராமல் தனது காமப்பசிக்கு இரையாக்கி கர்ப்பமாக்கி ஈவு இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களையும் நிலைகுலைய செய்துள்ளது.



வீட்டில் தூவ பயன்படுத்திய மிளகாய் பொடியின் கவர் மற்றும் கணேஷ் புகையிலையின் கவரும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இரண்டு கவர்களும் கிழிக்கப்பட்டிருந்த விதத்தை பார்த்தபோது ஒரே ஆள்தான் கிழித்துள்ளார் என்பதை போலீசார் உறுதி செய்தனர். மேலும் தூக்க மாத்திரை கொடுத்த கிளாஸ் வெளியிலேயே வீசி எறிந்தபோது உடைந்துள்ளது. அந்த கிளாஸ் பத்து நாட்களுக்கு முன் உடைந்தது என்று போலீசாரிடம் றூஸ்வெல்ட் கூறியுள்ளான். கிளாஸ் வெளியில் கிடந்து இரண்டு நாட்களுக்குள் தான் ஆகியிருக்கும் என்ற தோற்றத்தில் இருந்தது. இவைதான் காமக்கொடூரன் றூஸ்வெல்ட்டை போலீசுக்கு மிக எளிதாக அடையாளம் காட்டி கொடுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொலை நடந்த 48 மணி நேரத்திற்குள் கொலையாளியை கையோடு பிடித்த தனிப்படை போலீசாரை டி.எஸ்.பி., பொறுப்பு பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us